UPA Government’s Schemes for the vendors

காங்கிரஸ் தலைமையில் நிறைவேற்றப் பட்ட,” நியாயமான விலை பெற உரிமை ” சட்டம் நடைமுறைக்கு வந்தது,

விவசாயீகளுக்கு மட்டுமில்லாமல் ஏழை கூலி தொழிலளர்கள், மீன் பிடிபவரகள், சிறுகடை வியாபாரிகளுக்கும் கிடைக்கும் சட்டம் – நியாயமான விலை/ நஷ்ட ஈடு (சந்தை விலையை விட 2 – 4 மடங்கு அதிக விலை ) கிடைக்க வழி செய்யும்.

* நிலங்களை கையகப்படுத்துவதில், வெளிப்படையான தன்மை மேற்கொள்ளப்படும்.

*ஏழை கூலி தொழிலளர்கள், மீன் பிடிபவரகள், சிறுகடை வியாபாரிகளுக்கும் நஷ்ட ஈடு கிடைக்கும்

* நிலங்களை கையகப்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகங்களிடம், ஆலோசித்து, ஒப்புதல் பெற வேண்டும்.

* அரசு – தனியார் பங்களிப்பு திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களில், 70 சதவீதம் பேரிடம், ஒப்புதல் பெற வேண்டும்.

* தனியார் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களில், 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

* எந்த ஒரு திட்டத்துக்கு, வலுக்கட்டாயமாக, நிலங்களை கையகப்படுத்தக் கூடாது.

* கிராமப்புறங்களில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு, சந்தை மதிப்பில், நான்கு மடங்கு விலையும், நகர்ப்புறத்தில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு, சந்தை மதிப்பில், இரண்டு மடங்கு விலையும் கொடுக்க வேண்டும்.

* முழு விலையையும் கொடுக்கும் வரை, நிலத்தின் உரிமையாளருக்கு, அந்த நிலத்தில் உரிமை உண்டு.

Leave a Reply