Success Through Timeline

http://www.whereslloyd.com/cls

” இந்த தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும். 2009ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களை விட காங்கிரஸýக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதேபோல்தான் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அந்த தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து 2 முறை மத்தியில் ஆட்சியமைத்தது. அதுபோல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளை காங்கிரஸ் இழந்து விட்டதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது. தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் தளம், தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திமுக, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளன.”