Press Release – March 9, 2014

PRESS RELEASE – March 9, 2014
திருச்சி வேலுச்சாமி – கட்சி உறுப்பினராக – காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை
நான் இந்த அறிக்கையை – இன்று இரவு – 8-28 க்கு தொலைபேசியில், டெல்லியில் இருக்கும் எங்களது TNCC தலைவர் திரு. ஞான தேசிகன் அவர்களிடம் பேசிய பிறகே இதை எழுதுகிறேன்.
திரு. திருச்சி வேலுச்சாமியை – காங்கிரசின் மூத்த தலைவர் என்று பல ஊடகங்களும், செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் கூறி – கட்சிக்கு – குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில்- கட்சிக்கு அவப் பெயர் விளைவிக்கும் அவரது கருத்தை வெளியிடுகின்றன.
திரு. ஞான தேசிகன் – TNCC தலைவர் அவர்கள் – என்னிடம் – திருச்சி வேலுச்சாமி – கட்சி உறுப்பினராக – காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்று தெளிவாக கூறினார்.
ஆகவே அன்பு கூர்ந்து – திருச்சி வேலுச்சாமியை – காங்கிரசை சார்ந்தவர் – என்று கூற வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறோம். அப்படி குறிபிட்டால் அதன் விளைவுகளுக்கான பொறுப்பு ஊடகங்களுடையது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.